உலகத்தில் இருக்கும் பல்வேறு சர்வதேச இசைக்கலைஞர்களின் கவனத்தை சமீபத்தில் லண்டன் நகரில் நடந்து முடிந்த ‘சிம்பனி இசை கச்சேரி’ வாயிலாக தன்வசம் திருப்பியுள்ளார் இசைஞானி இளையராஜா. இதுவரை எந்த ஒரு இந்திய இசைக்கலைஞரும் நடத்திடாத சாதனையை நிகழ்த்தி காட்டி நாட்டில் உள்ள அனைத்து இந்தியர்களுக்கும் பெருமை சேர்த்துள்ளார் மேஸ்ட்ரோ இளையராஜா. காலத்தால் அழியாத பின்னணி இசை மற்றும் லட்சக்கணக்கான பாடல்களை இந்திய மொழிகளில் அளித்திருக்கிறார் இசைஞானி.
Read More: இசைஞானி இளையராஜாவின் Symphony Orchestra கொண்டு லண்டனில் இசை கச்சேரி!
சூப்பர் சிங்கர் ஜூனியர் 10 – ‘Celebrating Isaignani’
சித்தார், ட்ரம்பெட், கிட்டார், வீணை என பல்வேறு இசைக்கருவிகளை வாசிக்கும் இசை கலைஞர்கள் பங்கேற்று மேஸ்ட்ரோ ராஜாவின் இசையை வாசிக்க, மற்றொருபுறம் போட்டியாளர்கள் அவரின் இசையில் எவர்கிரீன் பாடல்களாக இருக்கும் ‘மடை திறந்து தாவும் நதி அலை நான்’, ‘கொடியிலே மல்லிகை பூ’, ‘கேளடி கண்மணி’ பாடல்களை பாடி கோல்டன் ஷவர் பெரும் காட்சிகள் தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோவில் காண்பிக்கப்படுகிறது. சூப்பர் சிங்கர் ஜூனியர் 10 சீசனில் முதல் முறையாக ‘Celebrating Isaignani’ என்ற சுற்று ஒளிபரப்பாகிறது. இது இளையராஜாவின் ரசிகர்களை உற்சாக படுத்தியுள்ளது என்றே கூறலாம்.
Read More: ஜீ தமிழ் (Zee Tamil) சேனலில் திங்கள் முதல் சனி வரை ஒளிபரப்பாகும் சீரியல்களின் பட்டியல்!
நிகழ்ச்சியின் பெயர் | சூப்பர் சிங்கர் ஜூனியர் 10 |
சுற்று | Celebrating Isaignani |
நாள் | 15 & 16 மார்ச் 2025 |
ஒளிபரப்பாகும் நேரம் | மாலை 6.30 மணி |
Don't miss out on the Latest Updates! Join our official WhatsApp channel and follow us on, YouTube, Instagram, Facebook, and Twitter for Breaking News. Send your press releases to: [email protected]