சூப்பர் சிங்கர் ஜூனியர் 10 ஆரம்பமாகி, ரசிகர்களின் ஆர்பரிப்பான வரவேற்புடன் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த வாரம் மறைந்த நடிகர் விஜயகாந்த் அவர்களின் நினைவாக அவரின் படத்தின் பாடல்களை சிறுவர்கள் அனைவரும் தேர்ந்தெடுத்த பாடவுள்ளனர். இதனை இன்று வெளியான ப்ரோமோ வழியாக அறிவித்துள்ள நிலையில், இந்த சுற்றிற்கு ‘என்றென்றும் கேப்டன்’ என அறிவித்துள்ளனர்.
வரும் வாரம் #SuperSingerJunior-ல என்றென்றும் கேப்டன் ❤️ Super Singer Junior 10 – Sat & Sun @ 6:30 pm #SuperSingerJunior10 #SuperSingerJunior #SSJ #SSJ10 #VijayTelevision #VijayTV pic.twitter.com/uW167yBZkD
— Vijay Television (@vijaytelevision) December 15, 2024
சனி மற்றும் ஞாயிறு கிழமைகளில் மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்பாகும் சூப்பர் சிங்கர் ஜூனியர் 10 ல் இந்த வாரம் குழந்தைகள் மட்டுமல்லாமல் கடந்த சீசன்களில் பங்கேற்ற பாடகர்களும், நடுவர்களை நடிகர் விஜயகாந்தின் மறக்கமுடியாத பிரபல பாடல்களை மேடையில் பாடவுள்ளனர். இந்த சுற்றிற்கு கேப்டன் விஜயகாந்த் அவர்களின் மூத்த மகன் சண்முக பாண்டியன் சிறப்பு விருந்தினராக பங்கேற்கவுள்ளார்.
இன்று வெளியான ப்ரோமோவில் சூப்பர் சிங்கர் ஜூனியர் 10 நிகழ்ச்சியில் பங்கேற்கும் குழந்தைகள் அனைவரும் அனைவரும் விஜயகாந்த் அவர்களின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திவிட்டு இந்த வார சுற்றிற்கு தயாராகும் காணொளியும் காணப்பட்டது. இந்த சீஸனின் நடுவர்களான பாடகர் மனோ, பாடகி சித்ரா மற்றும் இசையமைப்பாளர் D இமான் ஆகியோர் சமீபத்தில் பிரபலமாகி வரும் ‘நீ போட்டு வெச்ச தங்கள் குடம்’ பாடலை இணைந்து பாடி இந்த சுற்றை துவக்கி வைப்பார்கள் என தெரிகிறது. ‘என்றென்றும் கேப்டன்’ சுற்றில் சிறப்பாக பாடி அதிக மதிப்பெண்களை சேகரிக்கும் குழந்தைக்கு நடிகர் விஜயகாந்தின் உருவச்சிலை கொண்ட ஒரு விருது பரிசாக வழங்கப்படும்.
கேப்டன் விஜயகாந்த் அவர்கள் நீண்ட காலமாக உடல் நிலை சரியில்லாமல் இருந்த நிலையில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 28ம் தேதி இயற்கை எய்தினார். இவரின் மகன் ஷண்முக பாண்டியன் தற்போது படங்களில் நடித்துவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.