மே மாதம் தொடங்கப்பட்ட டாப்பு குக்கு டூப்பு குக்கு முதல் சீசன் 17 எபிசோடுகளை கடந்து தற்போது இறுதி கட்டத்தை நோக்கி பயணித்து கொண்டிருக்கிறது. குக் வித் கோமாளியில் இருந்து விலகிய Chef வெங்கடேஷ் பட், அதிர்ச்சி அருண், மோனிஷா, பரத், தீபா, ஜி.பி.முத்து உள்ளிட்டோர் சன் டிவி மற்றும் மீடியா மேசன்ஸ் இணைந்து நடத்தும் “டாப்பு குக்கு டூப்பு குக்கு” நிகழ்ச்சியில் வந்து இணைந்தனர். இதனால் இந்த நிகழ்ச்சியின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்தது. ஞாயிற்று கிழமை மதியம் 12.30 மணிக்கு இந்த நிகழ்ச்சி சன் டிவியில் ஒளிபரப்பாகிறது.
நரேந்திர பிரசாத்
செப்டம்பர் 8 ஆம் தேதி ஒளிபரப்பான “டாப்பு குக்கு டூப்பு குக்கு” நிகழ்ச்சியின் semifinal எபிசோடில் முதல் finalist ஆக NP என்று அழைக்கப்படும் நரேந்திர பிரசாத் தேர்வு செய்யப்பட்டார். Chef சரண் அவர்களின் மேற்பார்வையில் சமையல் கலைகளை கற்றுக்கொண்டு இந்த நிகழ்ச்சியின் முதல் சீசன் முதல் finalist ஆக மாறியிருக்கிறார். “கல்லூரி சாலை, try pandrom, கதைப்போமா” போன்ற டிவி சீரிஸ், மற்றும் பாபா பிளாக் ஷீப் திரைப்படத்திலும் நடித்துள்ளார். Blacksheep யூ டியூப் சேனல் மூலமாக இணையத்தில் பிரபலமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

FEFSI விஜயன்
இரண்டாவது finalist ஆக தேர்வு செய்யப்பட்ட FEFSI விஜயன் “ஊசிங் ரெட் கியூட்டி” என்ற ஆஸ்திரேலியா உணவை செய்து நடுவர்களை அசத்தினார். “வில்லன், ஆஞ்சநேயா, மார்க்கண்டேயன், DD RETURNS, தேவராட்டம்” போன்ற திரை படங்களில் வில்லனாக கண்ட ரசிகர்களுக்கு, இவரின் இந்த புதுரூபம் நல்ல வரவேற்பை பெற்றது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட மொழிகளில் stunt choreographer ஆக பல திரைப்படங்களில் பணியாற்றி உள்ளார். Chef செருபா அவர்களின் மேற்பார்வையில் சமையல் கலைகளை கற்றுக்கொண்டார்.
குக்கு வித் கோமாளி’யை வீழ்த்திய சன் டிவியின் ‘TOP COOKU DUPE COOKU’!

நடிகை சுஜாதா
மூன்றாவது பைனலிஸ்ட் ஆக நடிகை சுஜாதா தேர்வு செய்யப்பட்டார். “பசங்க, சுந்தர பாண்டியன், கோழி சோடா, காக்கி சட்டை” படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை சுஜாதா. முதல் முறையாக தொலைக்காட்சி ரியாலிட்டி ஷோவில் பங்கேற்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்னும் சில வாரங்களில் ஒளிபரப்பாகும் பைனல் எபிசொடில் யார் இந்த முதல் சீசனின் முதல் வெற்றியாளர் என்று தெரியவரும்.
Don't miss out on the Latest Updates! Join our official WhatsApp channel and follow us on, YouTube, Instagram, Facebook, and Twitter for Breaking News. Send your press releases to: [email protected]