Bigg Boss Tamil & Kamal Haasan : கோலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ஒருவரான ‘உலக நாயகன்’ கமல்ஹாசன் விஜய் டிவியில் 2017-ஆம் ஆண்டு முதல் இந்த ஆண்டு (2024) வரை ஒளிபரப்பாகி வந்த ‘பிக் பாஸ்’ ரியாலிட்டி ஷோவின் 7 சீசன்களையும் மிகச் சிறப்பாகவும், சுவாரஸ்யமாகவும் தொகுத்து வழங்கி வந்தார். இவர் ஒவ்வொரு சீசனுக்கும் எவ்வளவு சம்பளம் வாங்கினார் என்று தெரியுமா?
‘பிக் பாஸ்’ சீசன் 1 :

‘பிக் பாஸ்’ ரியாலிட்டி ஷோவின் சீசன் 1 2017-ஆம் ஆண்டு ஜூன் 25-ஆம் தேதி முதல் செப்டம்பர் 30-ஆம் தேதி வரை ஒளிபரப்பானது. இதற்காக ‘உலக நாயகன்’ கமல்ஹாசன் ரூ.15 கோடி சம்பளம் வாங்கினார். இந்த சீசனின் டைட்டில் வின்னர் – ஆரவ், ரன்னர் அப் – சினேகன்.
‘பிக் பாஸ்’ சீசன் 2 :

‘பிக் பாஸ்’ ரியாலிட்டி ஷோவின் சீசன் 2 2018-ஆம் ஆண்டு ஜூன் 17-ஆம் தேதி முதல் செப்டம்பர் 30-ஆம் தேதி வரை ஒளிபரப்பானது. இதற்காக ‘உலக நாயகன்’ கமல்ஹாசன் ரூ.18 கோடி சம்பளம் வாங்கினார். இந்த சீசனின் டைட்டில் வின்னர் – ரித்விகா, ரன்னர் அப் – ஐஸ்வர்யா தத்தா.
‘பிக் பாஸ்’ சீசன் 3 :

‘பிக் பாஸ்’ ரியாலிட்டி ஷோவின் சீசன் 3 2019-ஆம் ஆண்டு ஜூன் 23-ஆம் தேதி முதல் அக்டோபர் 6-ஆம் தேதி வரை ஒளிபரப்பானது. இதற்காக ‘உலக நாயகன்’ கமல்ஹாசன் ரூ.25 கோடி சம்பளம் வாங்கினார். இந்த சீசனின் டைட்டில் வின்னர் – முகேன் ராவ், ரன்னர் அப் – சாண்டி.
‘பிக் பாஸ்’ சீசன் 4 :

‘பிக் பாஸ்’ ரியாலிட்டி ஷோவின் சீசன் 4 2020-ஆம் ஆண்டு அக்டோபர் 4-ஆம் தேதி முதல் 2021-ஆம் ஆண்டு ஜனவரி 17-ஆம் தேதி வரை ஒளிபரப்பானது. இதற்காக ‘உலக நாயகன்’ கமல்ஹாசன் ரூ.50 கோடி சம்பளம் வாங்கினார். இந்த சீசனின் டைட்டில் வின்னர் – ஆரி, ரன்னர் அப் – பாலாஜி முருகதாஸ்.
‘பிக் பாஸ்’ சீசன் 5 :

‘பிக் பாஸ்’ ரியாலிட்டி ஷோவின் சீசன் 5 2021-ஆம் ஆண்டு அக்டோபர் 3-ஆம் தேதி முதல் 2022-ஆம் ஆண்டு ஜனவரி 16-ஆம் தேதி வரை ஒளிபரப்பானது. இதற்காக ‘உலக நாயகன்’ கமல்ஹாசன் ரூ.75 கோடி சம்பளம் வாங்கினார். இந்த சீசனின் டைட்டில் வின்னர் – ராஜு ஜெயமோகன், ரன்னர் அப் – பிரியங்கா.
“கமலின் ‘உத்தம வில்லன்’ படத்தால் எனக்கு மிகப்பெரிய நஷ்டம்”…லிங்குசாமி வெளியிட்ட பரபரப்பு அறிக்கை!
‘பிக் பாஸ்’ சீசன் 6 :

‘பிக் பாஸ்’ ரியாலிட்டி ஷோவின் சீசன் 6 2022-ஆம் ஆண்டு அக்டோபர் 9-ஆம் தேதி முதல் கடந்த ஆண்டு (2023) ஜனவரி 22-ஆம் தேதி வரை ஒளிபரப்பானது. இதற்காக ‘உலக நாயகன்’ கமல்ஹாசன் ரூ.100 கோடி சம்பளம் வாங்கினார். இந்த சீசனின் டைட்டில் வின்னர் – அஸீம், ரன்னர் அப் – விக்ரமன்.
Simbu-விற்கு மாறி மாறி வரும் பிரச்சினைகள், தயாரிப்பாளருடன் புதிய சலசலப்பு.
‘பிக் பாஸ்’ சீசன் 7 :

‘பிக் பாஸ்’ ரியாலிட்டி ஷோவின் சீசன் 7 கடந்த ஆண்டு (2023) அக்டோபர் 1-ஆம் தேதி முதல் இந்த ஆண்டு (2024) ஜனவரி 14-ஆம் தேதி வரை ஒளிபரப்பானது. இதற்காக ‘உலக நாயகன்’ கமல்ஹாசன் ரூ.130 கோடி சம்பளம் வாங்கினார். இந்த சீசனின் டைட்டில் வின்னர் – அர்ச்சனா, ரன்னர் அப் – மணிச்சந்திரா.
‘
Don't miss out on the Latest Updates! Join our official WhatsApp channel and follow us on, YouTube, Instagram, Facebook, and Twitter for Breaking News. Send your press releases to: [email protected]