டாப்பு குக்கு டூப்பு குக்கு என்கிற பெயரில் சன் டிவி குக்கு வித் கோமாளியின் காப்பி ஷோவை ஒளிபரப்ப ஆரம்பித்ததில் இருந்து கடும் நெருக்கடியில் இருக்கிறது விஜய் டிவி. கடந்த இரண்டு வாரங்களாக குக்கு வித் கோமாளியை டிஆர்பியில் வீழ்த்தி முன்னேறிவருகிறது டாப்பு குக்கு டூப்பு குக்கு நிகழ்ச்சி.

இதனால் Bigg Boss 8 ரியாலிட்டி ஷோவின் ரேட்டிங்கை மிகவும் நம்பியிருக்கிறது விஜய் டிவி. வரும் செப்டம்பர் மாத இறுதியில் பிக்பாஸ் 8 தொடங்க இருக்கு நிலையில் அதற்கான ஆயத்தப் பணிகள் இப்போதே தொடங்கிவிட்டது.
பைக் டூரராக யு-ட்யூபில் புகழ்பெற்று பின்னர் பைக் ஸ்டண்ட்டுகளால் கைது செய்யப்பட்டு பிரபலமான டிடிஎஃப் வாசன் பிக்பாஸ் 8-ல் கலந்துகொள்வதற்கான பேச்சுவார்த்தைகள் நடந்துகொண்டிருக்கின்றன. இவரது காதலியான ஷாலின் ஜோயா ஏற்கெனவே குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்குபெற்றுவரும் நிலையில் இவர்கள் இருவரையுமே ஜோடியாக பிக்பாஸ் 8-ல் களமிறக்க திட்டமிட்டிருக்கிறது விஜய் டிவி.
டிடிஎஃப் வாசன் நிகழ்ச்சியில் இருந்தால் கன்டென்ட் வைரல் ஆகும் என்பதால் பெரும்தொகையை டீலாகப் பேசிக்கொண்டிருக்கிறது விஜய் டிவி.
Don't miss out on the Latest Updates! Join our official WhatsApp channel and follow us on, YouTube, Instagram, Facebook, and Twitter for Breaking News. Send your press releases to: pressrelease@southmoviez.com