2007 ஆம் ஆண்டு “Super singer Junior” – இது தமிழகத்தின் செல்ல குரலுக்கான தேடல்” என்ற singing ரியாலிட்டி ஷோவை தமிழில் முதலில் தொடக்கிவைத்ததே விஜய் டிவி தான். மக்கள் இடையே பெரும் ஆதரவு மற்றும் வரவேற்பை பெற்ற இந்த நிகழ்ச்சி வெற்றிகரமாக அடுத்தடுத்த வருடங்களில் அடுத்தடுத்த சீசனை நடத்தியது. முதல் சீசனில் k.s.சித்ரா மற்றும் உஷா உதுப் நடுவர்களாக இருந்தனர்.
கடந்த 9-வது சீசன் K.S. சித்ரா, அந்தோணி தாசன் மற்றும் இசையமைப்பாளர் தமன் நடுவர்களாக நியமிக்கப்பட்டனர். எல்லா சீசனை போலவே கடந்த சீசனும் அதில் பங்கேற்ற எல்லா போட்டியாளர்களும் மக்கள் மத்தியில் நல்ல பிரபலம் அடைந்தனர். டைட்டில் winner ஆக கோயம்புத்தூரை சேர்ந்த ஸ்ரீநிதா அறிவிக்கப்பட்டார். இந்த வருடம் சீசன் 10 தொடங்கவுள்ள நிலையில் அதில் பங்கேற்க audition-ஐ தொடங்கியது விஜய் டிவி. ஏற்கனவே ஆகஸ்ட் 16 ஆம் தேதி பெரம்பலூர் மற்றும் அரியலூர், 18 ஆம் தேதி திண்டுக்கல், 30 ஆம் தேதி பொள்ளாச்சி, 31 அன்று ஊட்டியில் உள்ள யூனிக் இன்டர்நேஷனல் பள்ளியில் காலை 10 மணி முதல் துவங்குகிறது.
அடுத்த கட்ட audition செப்டம்பர் 1 ஆம் தேதி வரும் ஞாயிறு காலை 10 மணி முதல் தொடங்க உள்ளது. இதில் சூப்பர் சிங்கர் சீனியர் போட்டியில் பங்கேற்ற போட்டியாளர்கள் வரப்போவதாக விஜய் டிவி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளனர். இதில் பங்கேற்க வயது 6 – 15 ஆக வரையறுக்கப்பட்டுள்ளது, போட்டியாளர்கள் அவர்களது புகைப்படம் மற்றும் அவர்களின் வயதை உறுதி செய்யும் விதமான ஆவணங்களை எடுத்து வரவேண்டி அறிவுறுத்தப்பட்டுள்ளது. audition நடைபெறும் இடம் கோயம்பத்தூரில் உள்ள “இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரி”.
Don't miss out on the Latest Updates! Join our official WhatsApp channel and follow us on, YouTube, Instagram, Facebook, and Twitter for Breaking News. Send your press releases to: [email protected]