வாரம் முழுவதும் ஒளிபரப்பாகும் சீரியல்கள் தற்போது சனிக்கிழமை வரை ஒளிபரப்பாகிறது,சில தொலைக்காட்சியில் ஞாயிற்று கிழமையும் ஒளிபரப்பாகிறது. இருப்பினும் ரியாலிட்டி ஷோஸ் தங்களுக்கு கிடைத்த ஒரு நாளில் புதுமையான படைப்பாற்றலை வெளிப்படுத்தி மக்களை பல ஆண்டுகளாக கவர்ந்து வருகின்றன. சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ் ஆகிய மூன்று தமிழ் தொலைக்காட்சியில் வெளியாகும் ரியாலிட்டி ஷோ இந்த டாப் 10 பட்டியலில் இடம் பெற்றுள்ளது.
Week 4 UR TRP ரேட்டிங் – டாப் 10
கடந்த வாரம் ஒளிபரப்பான ஷோக்களில் UR என குறிப்பிடப்படும் “தனித்துவமான பார்வையாளர்கள்” கொண்ட டாப் 10 non fiction என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும், ரியாலிட்டி ஷோவின் trp பட்டியல் இதோ!
1.SAREGAMAPA
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் மிக முக்கிய ரியாலிட்டி ஷோ “SAREGAMAPA”. தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு கிராமம் மற்றும் நகரத்தில் இருந்து கலந்து கொள்ளும் போட்டியாளர்கள், ஒவ்வொரு வாரமும் நடத்தப்படும் போட்டியில் தங்களின் இனிதான குரலில் பாடல்கள் பாடி தங்களின் திறமையை வெளிக்காட்டுவர். இந்த ஆண்டு சிறுவர்களுக்கான “Lil Champs சீசன் 4” எப்போதும் போல் நல்ல வரவேற்பை பெற்று முதல் இடத்தை பிடித்துள்ளது.
TRP ரேட்டிங் – 5.44
2.சூப்பர் சிங்கர் ஜூனியர்ஸ்
ஜீ தமிழ் சிங்கிங் ரியாலிட்டி ஷோவின் போட்டியாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் “சூப்பர் சிங்கர் ஜூனியர்ஸ் – சீசன் 10” அதற்கு இணையான வரவேற்பை தமிழகம் முழுவதும் ஈட்டியுள்ளது. வாராவாரம் இடம்பெறும் ரவுண்டு, சிறப்பு விருந்தினர்கள் என அனைத்தும் ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறது.
TRP ரேட்டிங் – 4.31
3.அண்டகா கசம்
விஜய் டிவியில் ஞாயிறு இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகும் “அண்டகாகாசம்” சீசன் 3 வெற்றிகரமாக ஆறு எபிசோடுகளை கடந்து சென்று கொண்டிருக்கிறது. விஜய் டிவி பிரபலங்களை வைத்து நடத்தப்படும் இந்த ஷோ சற்று வித்தியாசமாக, கலந்து கொள்ளும் விருந்தினர்களின் ஆற்றலை சோதிக்கும் வண்ணம் ஒவ்வொரு சுற்றும் இருக்கும், அது பார்க்கும் மக்களின் கவனத்தையும் ஈர்ப்பது சிறப்பு.
TRP ரேட்டிங் – 4.23
4.ஆகாத மாமியார் ஆகாத மருமகள்
சீரியல் trp ரேட்டிங்கில் பல மாதங்களாக ஆதிக்கம் செலுத்தி வரும் சன் டிவியின் ரியாலிட்டி ஷோ நான்காவது இடத்தை பிடிப்பது ஆச்சரியம் இல்லை. ஆனால் இந்த பட்டியலில் சன் டிவியின் ரியாலிட்டி ஷோ இடம்பெறுவது சொற்பமே. ஏனென்றால் ரியாலிட்டி ஷோவில் ஆதிக்கம் செலுத்துவது ஜீ தமிழ் மற்றும் விஜய் டிவி தான். இந்த ஷோவில் சன் டிவி நட்சத்திரங்கள் கலந்து கொள்வர்.
TRP ரேட்டிங் – 4.08
5.நாங்க ரெடி நீங்க ரெடியா
சன் டிவியின் சின்னத்திரை நட்சத்திரங்கள் ஜோடியாக பங்கேற்று தங்களின் தனித்துவத்தை வெளிப்படுத்தும் ரியாலிட்டி ஷோ தான் “நாங்க ரெடி நீங்க ரெடியா”.
TRP ரேட்டிங் – 3.73
6.ஜோடி
விஜய் டிவியின் நடன ரியாலிட்டி ஷோ “ஜோடி ARE YOU READY” சீசன் 2 சில வாரங்களுக்கு முன் லான்ச் செய்யப்பட்டது. ரியோ ராஜ், ஏஞ்சலின் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சிக்கு முதல் வாரத்தில் இருந்து நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.
TRP ரேட்டிங் – 3.08
7.மகாநடிகை
ஜீ தமிழ் தொலைக்காட்சியின் புதிய முயற்சியில் 2024 ஆம் ஆண்டு லான்ச் செய்யப்பட்ட ரியாலிட்டி ஷோ “மகாநடிகை”. வெள்ளித்திரையில் மிகப் பெரிய நடிகையாக வலம் வர வேண்டும் என்ற கனவுகளுடன் இருக்கும் பெண்கள் ஒவ்வொரு வாரமும் அவர்களுக்கு கொடுக்கப்படும் டாஸ்க்கில் தங்களின் நடிப்பு திறமையை வெளிகாட்டுவர்.
TRP ரேட்டிங் – 2.53
8.கம்பெனி
மாகாபா தொகுத்து வழங்கி வரும் மற்றொரு ரியாலிட்டி ஷோ “கம்பெனி”, இந்த முதல் சீசன் 2024 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு ஒவ்வொரு ஞாயிறும் மதியம் 1 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியில் சின்னத்திரை பிரபலங்கள் பங்கேற்று, பல்வேறு வகையான சுற்றுக்களை எதிர் கொண்டு பணத்தை வெல்லும் ஷோ இந்த கம்பெனி.
TRP ரேட்டிங் – 2.21
9.நீயா நானா
தமிழகம் முழுவதும் மிகவும் பரிச்சயமான டாக் ஷோ “நீயா நானா” 2006 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை சமூகத்தில் நிகழும் பிரச்சனைகள் முதல் மனிதர்களின் நுட்பமான உணர்ச்சிகள், திரைப்படம், ரசிகர்கள், கணவன் மனைவி உறவு அதன் நுட்பங்கள் என பலவிதமான கோணங்களில் அதை ஆதரிப்பவர் ஒரு பக்கம் எதிர்ப்பவர் மறுபக்கம் அமர்ந்து கருத்துக்களை பகிர்ந்து கொள்வர். இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வரும் கோபிநாத் அவர்களின் ஆழமான பேச்சு சாமான்ய மக்கள் முதல் தற்போது இருக்கும் 2கே கிட்ஸ் வரை கவர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
TRP ரேட்டிங் – 1.97
10.தமிழா தமிழா
“நீயா நானா” நிகழ்ச்சியின் மாபெரும் வெற்றியை பின்பற்றி உருவாக்கப்பட்டது தான் ஜீ தமிழ் தொலைக்காட்சியின் “தமிழா தமிழா”. 2018 ஆம் ஆண்டு லான்ச் செய்யப்பட்ட இந்த ஷோ கோலிவுட் பிரபலம் கரு.பழனியப்பன் தொகுத்து வழங்கினார். சில ஆண்டுகளுக்கு முன் அவர் விலகிய பிறகு, தொலைக்காட்சியில் பல ஆண்டுகள் பணியாற்றிய சின்னத்திரை தொகுப்பாளர் ஆவுடையப்பன் தற்போது இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.
TRP ரேட்டிங் – 1.04
“Kadhala Kadhala” – Colors தமிழ் தொலைக்காட்சியில் புத்தம் புதிய தொடர்… விரைவில்!!
Don't miss out on the Latest Updates! Join our official WhatsApp channel and follow us on, YouTube, Instagram, Facebook, and Twitter for Breaking News. Send your press releases to: [email protected]