Home shows Cooking reality show-வில் இறங்குகிறது Zee Tamil!!

Cooking reality show-வில் இறங்குகிறது Zee Tamil!!

காமெடி மற்றும் சமையல் கலந்த ஒரு புதுவித reality ஷோவை “குக் வித் கோமாளி” என்ற பெயரில் ஆரம்பித்தது விஜய் டிவி அதை தொடர்ந்து சன் டிவியில் “டாப்பு குக்கு டூப்பு குக்கு” இந்த வருடம் தொடங்கப்பட்டது. அதன் வரிசையில் Zee Tamil தொலைக்காட்சியும் தற்போது சேர்ந்துள்ளது.

by Shanmuga Lakshmi

விஜய் டிவியில் புதிதாக 2019-ஆம் ஆண்டு துவங்கப்பட்ட குக் வித் கோமாளி வெற்றிகரமாக 2024-ல் ஐந்தாவது சீசன் சென்று கொண்டிருக்கிறது. இதை inspiration ஆக வைத்து 2024-ல் சன் டிவியிலும் chef வெங்கடேஷ் பட் மற்றும் chef ராம்மோகன் நடுவர்களாக vj ராகேஷ் தொகுத்து வழங்கும் டாப்பு குக்கு டூப்பு குக்கு என்ற cooking reality show துவங்கப்பட்டது. எதிர்பார்த்ததை போல பெரும் வரவேற்பையும் பெற்றுள்ளது.

இந்த trend-ஐ தற்போது Zee Tamil தொலைக்காட்சியும் பின்தொடர முடிவு செய்துள்ளனர். ஆனால் சற்று வித்தியாசமாக. இன்று வெளியான 20 second “சமையல் எக்ஸ்பிரஸ்” என்ற cooking reality show-வின் ப்ரோமோவில் நடிகை சீதா தொகுத்து வழங்கப்போவதாக காட்டப்பட்டுள்ளது. அந்த நிகழ்ச்சியின் முழு சாராம்சம் என்ன என்பதை தெரிவிக்காமல் சஸ்பென்ஸாக விடப்பட்டுள்ளது.

இதற்கு முன் ஜீ தமிழில் 2011-ஆம் ஆண்டு ஒளிபரப்பான “அஞ்சறை பெட்டி” என்ற cooking show பெரும் வரவேற்பை பெற்ற ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

You may also like

Follow Us

Subscribe

Get the latest Tamil cinema news in Tamil on Kollywood Glam. From celebrity news to actor and actress photos, videos, updates, தமிழ் சினிமா செய்திகள் and more.

 

©2024 Kollywood Glam, Media News Company.

All Right Reserved.