ஜீ தமிழில் சரிகமப பாட்டு நிகழ்ச்சிக்கு தொடர்ந்து நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. முன்னணி டிவி சேனல்களில் ஒன்றான ஜீ தமிழில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு போட்டியாக இந்த நிகழ்ச்சியை ஆரம்பித்தனர். இப்போது சூப்பர் சிங்கர் ஐ விடவும் அதிக பார்வையாளர்களும் ரசிகர்களும் கூடிக்கொண்டே உள்ளனர்.
சனி மற்றும் ஞாயிறு விடுமுறை நாட்களில் ஒளிப்பரப்பப்படும் சரிகமப நிகழ்ச்சியில் வாராவாரம் பதிய சுற்று நடைபெறும். இந்த வாரம் இயக்குனர் மணிரத்னம் அவர்களின் படத்தில் உள்ள பாடல்களை தேர்ந்தெடுத்து பாடுகிறார்கள். ஆனால் அதை விட சிறப்பு என்னவென்றால், நிகழ்ச்சியில் பங்குபெறும் போட்டியாளர்கள் ‘மணிரத்னத்தின் மௌன ராகங்கள்’ சுற்றுக்காக ஒரு புரோமோ விடியோவில் நடித்துள்ளது தான்.
சரிகமப சீசன் 4- மணிரத்னத்தின் மௌன ராகங்கள்
‘மௌன ராகம்’- அருளினி அஸ்வினா ஆறுமுகம்- இந்திரஜித் கார்த்திக்- ரேவதி பாத்திரத்திலும் மற்றும் கோபிகா கேசவன்- அமன் சகா, மோகன்- ரேவதி , ‘அலைப்பாயுதே’- ஸ்வேதா மற்றும் சரத், மாதவன்- ஷாலினி பாத்திரத்திலும், ‘நாயகன்’- தொகுப்பாளினி அர்ச்சனா, ‘ரோஜா’- மேதா ராமசாமி மற்றும் முகேஷ் குமார் மதுபாலா- அரவிந் ஸ்வாமி பாத்திரத்திலும் ஜோடியாக நடித்த காட்சிகளை, ஜீ தமிழ் வலைதளங்களில் வெளியிட்டுள்ளனர். மேலும் பாலமுருகன், சரண் குமார், பொக்கிஷிய சாண்ட்ரா, சௌமியா முருகேஸ்வரன், சித்தங்குனா, அபிஷேக் ராஜேஷ், மேதா ராமசாமி, மகிழன் பரிதி, ஜெயபார்கவி சங்கர், கார்த்திகேயன், பா.விஜய், வீரபாண்டியன், ஷரங்க வரதராஜன், விஜய லோஷன் ஆகியோர் இந்த சுற்றில் என்னென்ன பாடல்கள் பாடப்போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பும் பெருகியுள்ளது.
சரிகமப சீனியர் சீசன் 4ல் பாடகர்கள் ஸ்ரீனிவாசன், கார்த்திக், விஜய் பிரகாஷ் மற்றும் பாடகி சைந்தவி ஆகியோர் நடுவர்கள். மணிரத்னம் பாடல்களை தங்களின் விருப்பப்ட்ட நிகழ்ச்சியில் கேட்க ரசிகர்கள் ஆவலாக இருக்கிறார்கள்.
Don't miss out on the Latest Updates! Join our official WhatsApp channel and follow us on, YouTube, Instagram, Facebook, and Twitter for Breaking News. Send your press releases to: [email protected]