ரித்திகா தமிழ் செல்வி
ரித்திகா தமிழ் செல்வி, கோயம்புத்தூரில் பள்ளிப் படிப்பை முடித்து, சென்னையில் கல்லூரிக் கல்வியைத் இளங்கலை கலை மற்றும் தமிழ் இலக்கியத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார். அவர் நடிப்பு, மாடலிங் மற்றும் ஆங்கரிங் ஆகியவற்றில் ஈடுபட்டுள்ளார். ரித்திகா முதன்முதலில் 2011 இல் “ராஜா ராணி” என்ற தொலைக்காட்சி தொடரில் வினோதினியாக தோன்றினார். ரித்திகா தமிழ் செல்வி “cook with comali” என்ற காமெடி சமையல் நிகழ்ச்சியின் மூலம் மிகவும் பிரபலமானார்.இன்ஸ்டாகிராமில் அவருக்கு தற்போது 1.9M பின்தொடர்பவர்கள் உள்ளனர்.
ID – Rithika
ரோஷ்ணி ஹரிப்ரியன்
ரோஷ்னி ஹரிப்ரியன் மாடலிங்கில் தனது வாழ்க்கையைத் தொடங்கினார், விளம்பரங்கள் மற்றும் குறும்படங்களில் நடித்துள்ளார். ரோஷ்னி “பாரதி கண்ணம்மா” என்ற தொலைக்காட்சி தொடரில் கண்ணம்மாவாக நடித்துள்ளார், இந்தத் தொடரின் மூலம் அவர் மிகவும் பரபலமானார். பின்னர் அவர் cook with comali season 3 நிகழ்ச்சியில் பங்கேற்றார் இந்த நிகழ்ச்சி அவரை மக்கள் மத்தியில் மேலும் பிரபலமாக்கியது. இந்த நிகழ்ச்சியில் தனது ஏழ்மையான பேச்சால் அனைவரையும் கவர்ந்தார். தன் தோற்றத்தையும் நிறத்தையும் பார்த்து கேலி செய்பவர்களுக்கு திறமை ஒன்றே போதும் என்பதை நிரூபித்தார். இன்ஸ்டாகிராமில் அவருக்கு தற்போது 1.7M பின்தொடர்பவர்கள் உள்ளனர்.
மேலும் படிக்க: Top 3- சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு சென்ற முன்னணி நடிகைகள்
ரசிதா மஹாலக்ஷ்மி
ரசிதா மஹாலக்ஷ்மி தெலுங்கு மற்றும் கன்னட தொலைக்காட்சி தொடர்களுடன் முக்கியமாக தமிழில் பணியாற்றியுள்ளார். ஸ்டார் விஜய்யில் ஒளிபரப்பான “சரவணன் மீனாட்சி”யில் மீனாட்சியின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானார். “பிரிவோம் சந்திப்போம்”, “இளவரசி”, “அவகாசிகள்”, “சுவாதி சினுகுலு,” “சரவணன் மீனாட்சி சீசன் 2,” “ஜூனியர் சீனியர்”, “நாம் இருவர் நமக்கு இருவர் சீசன் 2,” உட்பட பல தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார்.ரசிதா, தினேஷ் கோபாலசாமி என்பவரை கடந்த 2013ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவருடைய திருமண வாழ்கை வெற்றி பெறவில்லை.”RM CREATIONS” என்ற பெயரில் சொந்த தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார்.இன்ஸ்டாகிராமில் அவருக்கு தற்போது 1.5M பின்தொடர்பவர்கள் உள்ளனர்.
ID – Rachitha mahalakshmi Instagram
V.J. அர்ச்சனா
V.J.. அர்ச்சனா சன் டிவியில் வீடியோ ஜாக்கியாக பிரபலமடைந்தார், பின்னர் “ராஜா ராணி 2” மற்றும் “மொரட்டு சிங்கிள்ஸ்” போன்ற நிகழ்ச்சிகளில் தோன்றினார் மற்றும் Bigg boss தமிழ் season 7 ரியாலிட்டி ஷோவில் வெற்றி பெற்றார். விஷ்ணு விஜய், தினேஷ் கோபால்சாமி, மாயா கிருஷ்ணன் மற்றும் மணிச்சந்திரா போன்ற மற்ற போட்டியாளர்களை பின்னுக்குத் தள்ளி அர்ச்சனா வெற்றிபெற்று, முதல் வைல்டு கார்டு போட்டியாளர் என்ற பெருமையைப் பெற்றார்.
Bigg boss தமிழ் season 7 பங்கேற்றத்தின் மூலம் தொலைக்காட்சி துறையில் ஒரு முக்கிய நபராக அவரது அந்தஸ்தை உயர்த்தியது, ரசிகர்கள் மற்றும் பார்வையாளர்களிடமிருந்து அங்கீகாரத்தையும் பாராட்டையும் பெற்றார்.இன்ஸ்டாகிராமில் அவருக்கு தற்போது 1.4M பின்தொடர்பவர்கள் உள்ளனர்.
ID – Vj Archana
ஷபனா
ஷபானா ஷாஜகான் மாடலாக தனது வாழ்க்கையைத் தொடங்கி விளம்பரங்களில் தோன்றி பின்னர் செம்பருத்தி என்ற மெகா சீரியலில் நடித்தார். இந்த சீரியல் 2000 எபிசோட்களை கடந்துள்ளது. அவர் பார்வதி வேடத்தில் நடித்தார், அதன் மூலம் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார். ஷபானா கடந்த ஆண்டு ஆர்யன் என்பவாரை திருமணம் செய்து கொண்டார்.
இவர் தற்போது சன் டிவியில் Mr.manaivi என்ற சீரியலில் நடித்து வருகிறார். இன்ஸ்டாகிராமில் அவருக்கு தற்போது 1.1M பின்தொடர்பவர்கள் உள்ளனர்.
ID – Shabana Instagram
Don't miss out on the Latest Updates! Join our official WhatsApp channel and follow us on, YouTube, Instagram, Facebook, and Twitter for Breaking News. Send your press releases to: [email protected]