TV serial-களின் trp rating-ல் பல வாரங்களாக ஆதிக்கம் செலுத்தி வருகிறது முன்னணி தொலைக்காட்சி நிறுவனமான Sun Tv. முதல் மூன்று இடங்களை Sun Tv-யில் ஒளிபரப்பாகும் serial-களே தக்கவைத்து கொண்டு இருக்கிறது. இந்த வார எபிசோடுகள் காரசாரமாக, சுவாரஸ்யம் மிகுந்த காட்சிகளுடன் ஒளிபரப்பான நிலையில் அடுத்த வாரம் தொடர்ந்து காண்பதற்கான கூறுகளை கதையில் கொண்டுவந்துள்ளனர்.
1.மூன்று முடிச்சு
Sun Tv-ல் தினமும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகும் “மூன்று முடிச்சு” மெகா தொடர் launch செய்யப்பட்ட நாள் முதல் தற்போது வரை நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. நந்தினி மற்றும் சூர்யா இடையே மெதுமெதுவாக காதல் மலரும் வகையில் ஒவ்வொரு வாரமும் எபிசோடுகள் அமைந்து வருகிறது. மறுபுறம் தனது அம்மா சுந்தரவள்ளியை அவமானம் செய்ய எந்த எல்லைக்கும் செல்ல துணியும் சூர்யாவை கண்டு வெறுப்படையும் நந்தினியின் மனதை சீக்கிரம் சூர்யா வெல்ல வேண்டும் என்று துடிக்கும் பார்வையாளர்கள்.
சென்ற வாரம் மூன்றாவது இடத்தில் இருந்த “மூன்று முடிச்சு” தற்போது முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளது.
TRP Rating – 10.45
2.சிங்கப்பெண்ணே
தொடர்ந்து இரண்டு வாரங்களாக இரண்டாம் இடத்தை தன்வசப்படுத்தி உள்ளது “சிங்கப்பெண்ணே” மெகா தொடர். இந்த தொடர் Sun Tv-ல் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகிறது. அன்பு மற்றும் ஆனந்தி இடையே நிலவி வந்த குழப்பம் நீங்கிய பிறகு விறுவிறுப்பாகவும், cute ஆன காதல் காட்சிகள் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
TRP Rating – 10.41
3.கயல்
பல மாதங்களாக முதல் இடத்தில் இருந்து வந்த “கயல்” சீரியல் தற்போது இரண்டு இடங்கள் கீழே இறங்கி மூன்றாம் இடத்தில் உள்ளது. இந்த வார கதைக்களம் கதாநாயகன் எழில் கடத்தப்பட்டு அதை நோக்கி செல்வது போன்று அமைந்தது. இது பார்வையாளர்களுக்கு சற்று தொய்வு ஏற்படுத்தும் வண்ணம் இருந்த காரணத்தால் மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது “கயல்”.
TRP Rating – 10.23
4.சிறகடிக்க ஆசை
Vijay Tv-ல் ஒளிபரப்பாகும் அனைத்து சீரியல்களுக்கும் மிகப்பெரிய போட்டியாக பல மாதங்களாக TRP rating-ல் முன்னணி வகிக்கும் “சிறகடிக்க ஆசை” அந்த தரவரிசையில் நான்காவது இடத்தை பெற்றுள்ளது. ரோஹிணியின் சூழ்ச்சியால் பல எபிசோடுகளில் பல துன்பங்களை எதிர் கொண்டு வரும் மீனா மற்றும் வெற்றிக்கு விரைவில் அந்த உண்மை தெரிய வர வேண்டும் என்று பல ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டுள்ளனர்.
TRP Rating – 8.05
5.பாண்டியன் ஸ்டோர்ஸ் 2
ஐந்தாம் இடத்தை Vijay Tv-யின் “பாண்டியன் ஸ்டோர்ஸ் 2” தக்க வைத்துக் கொண்டுள்ளது. வாராவாரம் ஒரு புதுவிதமான சவால் அதை நேர்த்தியாக சமாளித்து ஜெயிக்கும் பாண்டியன் குடும்பத்தார் என்று கதைக்களத்திலும், TRP rating-ழும் முன்னேறிச் செல்கிறது. இந்த தொடரில் தற்போது காவல் நிலையத்தில் தவறான புகாரால் சிறையில் உள்ள கதிரை அதிரடி திட்டத்தால் பாண்டியன் மற்றும் அவரது மகன்கள் காப்பாற்றுவது போல் தற்போது ப்ரோமோ வெளியாகியுள்ளது.
TRP Rating – 7.09
6.பாக்கியலட்சுமி
Vijay Tv-யில் நான்கு ஆண்டுகளாக prime time-ல் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் “பாக்கியலட்சுமி” மெகா தொடர் தற்போது இறுதி கட்டத்தை நோக்கி சென்று கொண்டிருக்கும் காரணத்தால் மக்களின் கவனத்தை கணிசமாக ஈர்த்துள்ளது. இதன் காரணமாக trp rating பட்டியலில் 6 ஆம் இடம் கிடைத்துள்ளது.
TRP Rating – 6.68
முதல் ஆறு இடத்தில் உள்ள அனைத்து சீரியல்களும் prime time சீரியல்கள் என்பது குறிப்பிடத்தக்கது.