விஜய் டிவியில் நடிக்கும் தொலைக்காட்சி நடிகர்கள் படப்பிடிப்பின் போது பழகி, காதலித்து திருமணம் செய்வது பல முறை நடந்துள்ளது. அப்படி ஒரே சீரியலில் நடித்த நடிகர் நடிகைகள் காதலித்து அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையிலும் ஒன்றாக வாழ்ந்துவருவது உண்டு.

அப்படி விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நம்பர் 1 TRP ரேட்டிங் சிரியலான ‘சிறகடிக்க ஆசை’ கதாநாயகன் வெற்றி வசந்த் அவரின் இனஸ்டாக்ராமில் ஒரு பதிவு வெளியிட்டுள்ளார். அதில் விஜய் டிவியில் இப்போது ஒளிபரப்பாகவும் மற்றொரு ஹிட் சிரியலான ‘பொன்னி’ சீரியலில் நடிக்கும் நடிகை வைஷ்ணவியுடன் அவர் நடனமாடுகிறார்.
இந்த பதிவால் நடிகர் வெற்றி வசந்த் மற்றும் வைஷ்ணவி இருவரும் கல்யாணம் செய்யப்போவதாக அறிவித்துள்ளனர். இவர்கள் இருவரும் இரண்டு மாதங்கள் காதலித்து வந்ததாகவும், இப்போது திருமணம் செய்யவுள்ளதாகவும் அறிவித்துள்ளார்கள்.
வெற்றி வசந்த் விஜய் டிவியில் கதாநாயகனாக நடிக்கவருவதற்கு முன் YouTube சேனல்களில் web seriesகளில் நடித்துவந்தார். Naakout என்ற YouTube சேனலில் பல தொடர்களில் நடித்துவந்த வெற்றி வசந்த், இணையத்தில் இவருக்கு ரசிகர்கள் அதிகரித்தனர்.

இவரின் துறுதுறு நடிப்பால், தொடர்ந்து அந்த சேனல்களில் வெற்றி வசந்துக்கு வாய்ப்புகள் கிடைத்தது. இப்படி பல web seriesகளில் நடித்தவர், முதல் பெரிய வாய்ப்பாக அமைந்தது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ தொடர் தான்.
இந்த தொடரில் முத்து என்ற கதாபாத்திரத்தை முதலில் அடியோடு வெறுத்த மக்கள், பிறகு வெற்றி வசந்த் உடைய இயல்பான நடிப்பால் தனக்காக தனி ரசிகர்களை திரட்டினார். இவரின் கதாபாத்திரம் இந்த சீரியலின் மிக முக்கியமான அம்சமாக அமைய, இவருக்கான வரவேற்பும் அதிகரித்தது.
விஜய் டிவியின் Siragadikka Aasai சீரியல் 500 -வது எபிசோடை கடந்து சாதனை.
‘பொன்னி’ சீரியலில் கதாநாயகியாக நடிக்கும் வைஷ்ணவி, இன்ஸ்டாகிராமில் மாடலிங் செய்து வந்தார். பிறகு விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘ராஜா ராணி 2’ சீரியலில் துணை நடிகையாக அறிமுகமானார். பின்னர் மேலும் சில YouTube தொடர்களிலும், ஆல்பம் பாடல்களிலும் நடித்தார்.

இவர் கதாநாயகியாக நடித்துவரும் ‘பொன்னி’ சீரியல் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்புடன் மதியம் ஒளிபரப்பாகி வருகிறது. விஜய் டிவியில் நடக்கும் பொதுவான கலை நிகழ்ச்சிகளில் அணைத்து சீரியல் நட்சத்திரங்களும் கலந்துகொள்வார்கள். அப்படி ஏதேனும் ஒரு நிகழ்ச்சியில் வெற்றி வசந்த் மற்றும் வைஷ்ணவி சந்தித்து, காதலிக்க தொடங்கியிருப்பர்.
இவர்களின் இந்த நிச்சயதார்த்த செய்தி வெளியாகி வெளியாகி, பலருக்கும் ஆச்சரியமாக அமைந்தது. குறிப்பாக அவர்களின் ரசிகர்களுக்கே தெரியாமல் இருந்த செய்தி திடீரென வெளியிடப்பட்டதால் இவர்களுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
Don't miss out on the Latest Updates! Join our official WhatsApp channel and follow us on, YouTube, Instagram, Facebook, and Twitter for Breaking News. Send your press releases to: [email protected]