பண்டிகை என்றாலே காலை முதல் மாலை வரை பிடித்த உணவு, விடுமுறை என மகிழ்ச்சியாக பொழுதைபோக்கி வருவது வழக்கம். அதனை இன்னும் சிறப்பிக்க முன்னணி தொலைக்காட்சிகளில் புது படங்கள் ஒளிபரப்பாகிறது.
சன் டிவி:
அந்த வகையில் சன் டிவியில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான அயலான் படமும், அஜித் குமார் நடிப்பில் வெளியான வீரம், விஜய் நடிப்பில் வெளியான பிகில் படம் ஒளிபரப்பாகவுள்ளது.
2024 -ல் பொங்கல் சமயம் ஏலியன் என்பதை மையமாக கொண்டு சிவகார்த்திகேயன், ராகுல் ப்ரீத் சிங்க், கருணாகரன், யோகி பாபு, முனீஷ்காந்த் ஆகியோர் நடிப்பில் வெளியான படம் அயலான். R. ரவிக்குமார் இயக்கத்தில், AR. ரஹ்மான் இசையமைத்திருந்தார். சன் டிவியில் ஆயுத பூஜையன்று வெள்ளிக்கிழமை காலை 11 மணிக்கு ஒளிபரப்பாகவுள்ளது.
மதியம் 3 மணிக்கு அஜித்குமார், தமன்னா, நாசர், சந்தானம், வித்தார்த் நடிப்பில் 2014 -ல் பொங்கல் சமயம் வெளியான வீரம் படம் ஒளிபரப்பாகவுள்ளது.
மாலை 6.30 மணிக்கு 2019 -ல் விஜய், நயன்தாரா, டேனியல் பாலாஜி, ஜாக்கி ஷாரஃப் ஆகியோர் நடிப்பில் வெளியான பிகில் படம் ஒளிபரப்பாகவுள்ளது.
படங்கள் | நேரம் | நடிகர்கள் |
அயலான் | காலை 11 மணி | சிவகார்த்திகேயன், ராகுல் ப்ரீத் சிங்க், கருணாகரன், யோகி பாபு, முனீஷ்காந்த் |
வீரம் | மதியம் 3 மணி | அஜித்குமார், தமன்னா, நாசர், சந்தானம், வித்தார்த் |
பிகில் | மாலை 6.30 மணி | விஜய், நயன்தாரா, டேனியல் பாலாஜி, ஜாக்கி ஷாரஃப் |
கே டிவி:
அதிகளவு படங்கள் ஒளிபரப்பாகும் கே டிவியில் காதலா காதலா, ஸ்கேட்ச், ஜிகர்தண்டா டபுள் X, விவேகம், பிச்சைக்காரன் போன்ற படங்கள் ஒளிபரப்பாகவுள்ளது.
கமல் ஹாசன், பிரபு தேவா காம்போவில் ரம்யா, சௌந்தர்யா நடிப்பில் முழுக்க முழுக்க காமெடி படமாக என்றும் சிரிக்கவைத்த “காதலா காதலா” படம் காலை 7 மணிக்கு ஒளிபரப்பாகும்.
விக்ரம், தமன்னா நடிப்பில் ஸ்கேட்ச் படம் காலை 10 மணிக்கு ஒளிபரப்பாகும். மதியம் 1 மணிக்கு ராகவா லாரன்ஸ், SJ. சூர்யா நடிப்பில் மிரட்டலான கதைக்களத்தில் உருவான ஜிகர்தண்டா டபுள் X படம் ஒளிபரப்பாகும்.
மாலை 4 மணிக்கு அஜித்குமார், காஜல் அகர்வால் நடிப்பில் வெளியான விவேகம் படம் ஒளிபரப்பாகவுள்ளது. மேலும் இரவு 7 மணிக்கு விஜய் ஆண்டனி நடிப்பில் மெகா ஹிட் அடித்த பிச்சைக்காரன் படம் ஒளிபரப்பாகும்.
படங்கள் | நேரம் |
காதலா காதலா | காலை 7 மணி |
ஸ்கேட்ச் | காலை 10 மணி |
ஜிகர்தண்டா டபுள் X | மதியம் 1 மணி |
விவேகம் | மாலை 4 மணி |
பிச்சைக்காரன் | இரவு 7 மணி |
கலைஞர் டிவி:
கலைஞர் டிவியில் காலை 10 மணிக்கு விஷ்னு விஷால், ஐஸ்வர்யா லட்சுமி நடிப்பில் வெளியான கட்டா குஸ்தி படம் ஒளிபரப்பாகும். மதியம் 1.30 மணிக்கு கார்த்திக் வேணுகோபாலன் இயக்கத்தில் ஹிப் ஹாப் ஆதி, காஷ்மீரா பர்தேசி, அனேகா சுரேந்தரன், இளவரசு, தியாகராஜன், பிரபு, முனீஷ்காந்த் ஆகியோர் நடிப்பில் மே 24, 2024 -ல் வெளியான PT Sir படம் ஒளிபரப்பாகிறது.
அக்டோபர் 12 விஜயதசமி அன்று காலை 10 மணிக்கு உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, பகத் பாசில், கீர்த்தி சுரேஷ் நடிப்பில் 2023 – ல் வெளியான மாமன்னன் படம் ஒளிபரப்பாகிறது.
RS . துரை செந்தில்குமார் இயக்கத்தில் சூரி, சசிகுமார், உன்னி முகுந்தன், ரோஷ்ணி, ஷிவதா, சமுத்திரக்கனி, ஜார்ஜ் மரியான், மீம் கோபி ஆகியோர் நடிப்பில் மே 31, 2024 -ல் வெளியாகி பெரிய அளவில் வரவேற்பை பெற்ற கருடன் படம் மதியம் 1.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது.
படங்கள் | நேரம் |
கட்டா குஸ்தி | காலை 10 மணி (அக்டோபர் 11) |
PT Sir | மதியம் 1.30 மணி (அக்டோபர் 11) |
மாமன்னன் | காலை 10 மணி (அக்டோபர் 12 ) |
கருடன் | மதியம் 1.30 மணி (அக்டோபர் 12 ) |
ஜீ தமிழ்:
ஆயுதபூஜை நாளான அக்டோபர் 11 காலை 9.30 மணிக்கு ஹரி இயக்கத்தில் விஷால், பிரியா பவானி சங்கர், யோகி பாபு, கெளதம் வாசு தேவ் மேனன், சமுத்திரக்கனி ஆகியோர் நடிப்பில் 26, ஏப்ரல் 2024 -ல் வெளியான ரத்னம் படம் ஒளிபரப்பாகவுள்ளது.
அதேநாளில் மதியம் 3.30 மணிக்கு கீர்த்தி சுரேஷ், ரவீந்திர விஜய் நடிப்பில் 2024, ஆகஸ்ட் 15 -ல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற படமான ரகு தாதா ஒளிபரப்பாகவுள்ளது.
விஜயதசமி அன்று காலை 9.30 மணிக்கு தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி, கீர்த்தி சுரேஷ், தமன்னா, சுஷாந்த் அனுமோலு ஆகியோர் நடிப்பில் தமிழில் டப் செய்து “போல சங்கர்” படம் ஒளிபரப்பாகவுள்ளது.
மதியம் 3.30 மணிக்கு விமல், அனிதா சம்பத், பாண்டியராஜன், தீபா சங்கர், நேஹா ஜிகா ஆகியோர் நடிப்பில் 2023 -ல் வெளியான தெய்வ மச்சான் படம் ஒளிபரப்பாகும்.
படங்கள் | நேரம் |
ரத்னம் | காலை 9.30 மணி (அக்டோபர் 11) |
ரகு தாதா | மதியம் 3.30 மணி (அக்டோபர் 11) |
போல சங்கர் | காலை 9.30 மணி (அக்டோபர் 12) |
தெய்வ மச்சான் | மதியம் 3.30 மணி (அக்டோபர் 12) |
விஜய் டிவி:
அக்டோபர் 11 காலை 11 மணிக்கு விஜய் ஆண்டனி, காவ்யா தப்பர், ஷிவாங்கி வர்மா, ஷீலா ராஜ்குமார், தேவ் கில் ஆகியோர் நடிப்பில் 2023-ல் வெளியான பிச்சைக்காரன் 2 படம் ஒளிபரப்பாகும்.
அக்டோபர் 11 மதியம் 2.30 மணிக்கு ஹரிஷ் கல்யாண், இந்துஜா ரவிசந்திரன், ப்ரதானா நாதன், இளவரசு, MS. பாஸ்கர், ரவி மரியா ஆகியோர் நடிப்பில் ரசிக்கவைத்த பார்க்கிங் படம் ஒளிபரப்பாகும்.
மாலை 5.30 மணிக்கு சுந்தர் சி, ராஷி கன்னா, தமன்னா, சந்தோஷ் பிரதாப் ஆகியோர் நடிப்பில் வெளியான அரண்மனை 4 படம் ஒளிபரப்பாகும். இந்த ஆண்டு மே மாதம் 3 -ல் வெளியாகி 100 கோடி வரை வசூல் செய்து அசத்தியது.
விஜயதசமியான அக்டோபர் 12 மதியம் 12.30 மணிக்கு மலையாள மொழியில் மட்டுமல்லாது இந்தியா முழுவதும் ஹிட் அடித்த மஞ்சுமல் பாய்ஸ் படம் ஒளிபரப்பாகவுள்ளது. பெரிய ஹீரோக்கள் இல்லாமல் கதையை மட்டுமே வைத்து ஹிட் அடித்த வெகு சில படங்களில் இதுவும் ஒன்று.
மாலை 4.00 மணிக்கு விஜய் ஆண்டனி, மிர்னாலினி ரவி, VTV கணேஷ் ஆகியோர் நடிப்பில் ஏப்ரல் 11, 2024 -ல் வெளியான ரோமியோ படம் ஒளிபரப்பாகவுள்ளது.
படங்கள் | நேரம் |
பிச்சைக்காரன் 2 | காலை 11 மணி (அக்டோபர் 11 ) |
பார்க்கிங் | மதியம் 2.30 மணி (அக்டோபர் 11 ) |
அரண்மனை 4 | மாலை 5.30 மணி (அக்டோபர் 11 ) |
மஞ்சுமல் பாய்ஸ் | மதியம் 12.30 மணி (அக்டோபர் 12 ) |
ரோமியோ | மாலை 4.00 மணி (அக்டோபர் 12 ) |