தமிழ் சீரியல்களின் நகர்ப்புற மற்றும் கிராமப்புற Week 51 TRP ரேட்டிங் நிலவரம் வெளியிடப்பட்டுள்ளது. இதில் சில மாற்றங்கள் நடைபெற்று சீரியல்களின் முன்னணி நிலவரம் மாறியுள்ளது. இந்த வாரம் டாப் 8 இடங்களை பிடித்த மெகா தொடர்களின் பட்டியலை காணலாம்.
8வது இடம் – பாண்டியன் ஸ்டோர்ஸ் 2
விஜய் டிவியின் முன்னணி மெகா தொடர்களில் நல்ல வரவேற்பை பெற்ற sequel மெகா தொடர் இதுவே. இந்த வாரம் மயிலின் அப்பா பாண்டியனின் பங்காளிகளிடம் மாட்டிக்கொண்டு அதனால் ஏற்பட்ட கைகலப்பு என்று பல சுவாரஸ்யமான நிகழ்வுகள் மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. தற்போது இருக்கும் கதைக்களம் முக்கிய கதாபாத்திரங்களை அடுத்த கட்ட பரபரப்புக்கு எடுத்து சென்று கொண்டிருக்கிறது.
TRP ரேட்டிங் – 6.52 TVR
7வது இடம் – பாக்கியலட்சுமி
பெரும்பாலான இல்லத்தரசிகளின் விருப்பமான சீரியல் ஆக “பாக்கியலட்சுமி” இருந்து வருகின்ற நிலையில் இந்த சீரியல் TRP ரேட்டிங்கில் பல வருடங்களாக நிலையான பார்வையாளர்களை கொண்டு நிலைத்து நிற்கிறது. இன்னும் சில வாரங்களில் இந்த மெகா தொடர் முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
TRP ரேட்டிங் – 6.69 TVR
6வது இடம் – சிறகடிக்க ஆசை
விஜய் டிவியில் தற்போது வரை முதல் இடத்தில் இருக்கும் மெகா தொடர் “சிறகடிக்க ஆசை”. இந்த தொடரில் ரோகிணி என்ற வில்லி கதாபாத்திரம் தனது மொத்த குடும்பத்தையும் ஏமாத்தி வந்த நிலையில் இந்த வாரம் கையும் களவுமாக சீரியலின் நாயகன் மற்றும் நாயகியிடம் மாட்டிக்கொண்டது அதீத கவனத்தை பெற்றுள்ளது. அது trp ரேட்டிங்கில் வெளிப்பட்டுள்ளது.
TRP ரேட்டிங் – 8.25 TVR
5வது இடம் – ராமாயணம்
தமிழ் ரசிகர்களிடம் டப்பிங் சீரியல்கள் நல்ல வரவேற்பை பல வருடங்களாக பெற்று வருகிறது. அதன் எடுத்துக்காட்டாக ஹிந்தியில் ஒளிபரப்பான “ராமாயணம்” மெகா தொடர் தமிழில் டப்பிங் செய்யப்பட்டு சன் டிவியில் மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்பு செய்யப்படுகிறது. இந்த சீரியலுக்கு நல்ல வரவேற்பு பெற்றுள்ளது காரணம் சின்னத்திரை சீரியலுக்கு அதிக செலவு செய்து படத்தில் காண்பிக்கப்படும் பிரம்மாண்டத்தை மக்களுக்கு சின்னத்திரையிலும் காட்டுவதே!
TRP ரேட்டிங் – 8.78 TVR
4வது இடம் – மருமகள்
இனிமையாக சென்று கொண்டிருந்த ஆதிரை மற்றும் பிரபுவின் இல்லற வாழ்க்கையில் புயலாக அடுத்தடுத்த பிரச்சனைகள் அரங்கேறி வருகிறது. தற்போது அவர்களுக்கு முட்டுக்கட்டையாக இருக்கும் 10 லட்ச ரூபாய் கடன் அவர்கள் இருவருக்கும் இடையில் விரிசல் ஏற்படுத்தி பார்வையாளர்களின் அனுதாபத்தை கவரும் வண்ணம் ஆதிரையின் சூழ்நிலை இயக்கப்பட்டுள்ளது. அதிரையின் துயரைத் துடைக்க போகும் தருணம் எது என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுப்பியுள்ளனர் இந்த சீரியல் குழு.
TRP ரேட்டிங் – 9.13
3வது இடம் – கயல்
முதல் இரண்டு இடங்களில் இடம்பெற்ற “கயல்” தற்போது மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. இந்த மெகா தொடர் அடுத்த வாரம் வெற்றிகரமாக 1000வது எபிசோடை எட்ட உள்ளது. இதை கொண்டாடும் வண்ணம் சன் டிவி அவர்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரீல்ஸ் ஒன்றையும் வெளியிட்டுள்ளது.
TRP ரேட்டிங் – 9.80
2வது இடம் – மூன்று முடிச்சு
புதிய on screen ஜோடி ஆன ஸ்வாதி மற்றும் நியாஸ் கான் சன் டிவி சீரியல் ரசிகர்களின் அபிமானத்தை பெற்றதால் trp ரேட்டிங்கில் நல்ல முற்றத்தை ஒவ்வொரு வாரமும் கண்டு வருகிறது. இந்த வாரம் நந்தினி மற்றும் சூர்யா இருவருக்கும் சூர்யாவின் குடும்பத்தினர் சூர்யாவின் அம்மாவான சுந்தரவல்லிக்கு தெரியாமல் கூட்டு முயற்சியில் மங்களங்கள் முழங்க திருமணம் செய்து வைக்க முடிவு செய்துள்ளனர். அவர்களின் திட்டம் நிறைவேறுமா? அல்லது சுந்தரவள்ளி இறுதி நேரத்தில் வந்து தடுத்துவிடுவாளா? பொறுத்து இருந்தே காண வேண்டும்.
TRP ரேட்டிங் – 9.92 TVR
1வது இடம் – சிங்கப் பெண்ணே
ஆனந்தி மற்றும் அன்பு கதாபாத்திரங்களுக்கு இடையே இருக்கும் காதல், ஒவ்வொரு எபிசோடும் அவர்கள் இருவரும் இணைந்து எதிர்கொள்ளும் பிரச்சனைகள் என பல வகையான உணர்ச்சிகளை உள்ளடக்கி மக்களுக்கு காண்பிப்பது நல்ல அங்கீகாரத்தை பெற மிகவும் உதவியாக இருந்து வருகிறது. அதனால் தான் தமிழ் மக்கள் இந்த சீரியலை மிகுதியாக கண்டு வருகின்றனர்.
TRP ரேட்டிங் – 10.03 TVR
முதல் ஐந்து இடங்களை பிடித்த சீரியல்கள் அனைத்தும் சன் டிவியில் ஒளிபரப்பு செய்யப்படுகின்றது என்பதை அனைவரும் அறிந்த ஒன்றே, ஆனால் சன் டிவியில் ஒளிபரப்பாகும் “மலர்” என்ற மேட்னி தொடர் அனைத்து தமிழ் சீரியல்களையும் விட 1.17 TVR என மிகவும் குறைவான trp ரேட்டிங் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்க ஒன்றாக உள்ளது.