Week 53-TRP rating வெளியானது, அதில் சென்ற வாரம் முதல் இடத்தில் இருந்த சீரியல் சற்று சரிவை சந்தித்து பட்டியலில் இடம் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதில் புதிதாக லான்ச் செய்யப்பட்ட “எதிர்நீச்சல் 2” நல்ல வரவேற்பை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
10.பாண்டியன் ஸ்டோர்ஸ் 2
பல வாரங்களாக 10வது இடத்தில் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சென்ற வாரத்தை விட சற்று அதிகமான trp ரேட்டிங் பெற்றுள்ளது. இதுவரை பரபரப்பு, நகைச்சுவை நிறைந்த கலாட்டாவாக திரைக்கதையில் சென்ற இந்த தொடர் சற்று மாறுதல் அடைந்துள்ளது.
TRP Rating – 6.66 TVR
9.பாக்கியலட்சுமி
பல ஆண்டுகளாக ஒளிபரப்பாகும் ‘பாக்கியலட்சுமி’ தொடர் முடிவுக்கு வரும் என்று பல நாட்களாக கூறப்படுகின்ற நிலையில், இந்த தொடர் மீதான ஆர்வம் ஒவ்வொரு வாரமும் குறைந்து வருகிறது. அதன் காரணமாக 9வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.
TRP Rating – 6.84 TVR
8.எதிர்நீச்சல் 2
சென்ற வருடத்தின் இறுதியில் மக்கள் பேராதரவுடன் சன் டிவியில் லான்ச் செய்யப்பட்ட “எதிர்நீச்சல் 2” நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த வார இறுதியில் 8வது இடத்தை பிடித்துள்ள எதிர்நீச்சல் 2 தொடரில் தற்போது மொத்த குடும்பத்திற்கும் தன்னை முழுமையாக நம்பும் தனது அண்ணனுக்கும் எதிரியாக மாறி உள்ள கதிர். கதிரின் வில்லத்தனமான பாத்திரத்தை காண ஆர்வத்துடன் இருக்கும் ரசிகர்கள்.
TRP Rating – 7.16 TVR
7.அன்னம்
சன் டிவி தொலைக்காட்சியில் பெரும்பாலான மெகா தொடர்கள் பெண்களை மையமாக வைத்து எடுக்கப்படுகிறது. அதில் மிகவும் குறிப்பிடத்தக்கவை “அன்னம்” மெகா சீரியல் ஆகும்.
TRP Rating – 8.31 TVR
6.ராமாயணம்
பகவான் ஸ்ரீ ராமர் மற்றும் சீதா தேவியின் மிகவும் பிரசித்தி பெற்ற “ராமாயணம்” கதையை தற்போது உள்ள சின்னத்திரை நடிகர்களை வைத்து உருவான இந்த தொடர் சன் டிவியில் ஒளிபரப்பாகி 6வது இடத்தை தக்கவைத்துள்ளது. இது டப்பிங் செய்யப்பட்ட தொடர் என்பது குறிப்பிடத்தக்கது.
TRP Rating – 8.59 TVR
5.சிறகடிக்க ஆசை
ரோகிணி என்ற வில்லி கதாபாத்திரத்தின் உண்மை முகம் உடைக்கப்பட்டதில் இருந்து விஜய் டிவியின் வெற்றிகரமான மெகா தொடர் “சிறகடிக்க ஆசை” இந்த வாரம் 5வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
TRP Rating – 8.87 TVR
4.மருமகள்
அதிரை மற்றும் பிரபு இடையே இருக்கும் விரிசல்கள் சரி செய்ய பிரபு முயற்சிக்க அதை தனது சூழ்ச்சியால் கெடுக்க நினைக்கும் வேல்விழி என்று அடுத்த சில வாரங்கள் எபிசோடுகள் செல்ல வாய்ப்புகள் இருக்கிறது. இந்த தொடர் சென்ற வாரம் இருந்த அதே நான்காவது இடத்தில் உள்ளது.
TRP Rating – 9.01 TVR
3.மூன்று முடிச்சு
ஸ்வாதி மற்றும் நியாஸ் இருவரின் on-screen ஜோடி நல்ல வரவேற்பை பெற்ற காரணத்தால் “மூன்று முடிச்சு” மெகா தொடர் லான்ச் செய்யப்பட்டதில் இருந்து trp ரேட்டிங்கில் முன்னிலை வகித்து வருகிறது. அன்பான, அப்பாவியான மருமகள் கதாபாத்திரத்தை தேர்ந்தெடுத்து அதற்கு சிறப்பு செய்து வரும் நடிகை ஸ்வாதி அதற்கு சற்றும் குறையாமல் சூர்யா கதாபாத்திரமாகவே வாழ்ந்து வரும் நியாஸ் இந்த சீரியல் வெற்றி பெற முக்கிய பங்காற்றியுள்ளனர்.
TRP Rating – 9.76
2.சிங்கப்பெண்ணே
அன்பு மற்றும் ஆனந்தி இருவரும் விரும்பும் உண்மையை தன்னை விரும்பி வரும் தனது முதலாளியான மகேஷிடம் ஆனந்தி கூறிய பிறகு சுக்குநூறாக உடைந்து போகும் மகேஷ் மனம், அதனால் அவனுக்குள் ஏற்பட்டுள்ள மாற்றம் மக்களுக்கு சுவாரஸ்யத்தை அளித்துள்ளது. இந்த வாரம் “சிங்கப்பெண்ணே” trp பட்டியலில் பிடித்துள்ள இடம் 2.
TRP Rating – 9.86 TVR
1.கயல்
ஐந்து வாரங்களுக்கு மேல் முதல் ஐந்து இடத்தில் இருந்த சன் டிவியின் “கயல்” தொடர் இந்த ஆண்டின் முதல் வார இறுதியில் முதல் இடத்தை பிடித்து சாதனை புரிந்துள்ளது. கயல் தங்கை தேவி மற்றும் அவளின் கணவர் இடையே இருக்கும் பிரச்சனையால் கருவுற்று இருக்கும் அவளின் உடல்நிலை சரியில்லாமல் போக மொத்த குடும்பமும் கவலைப்படுகிறது. அதனால் அவர்கள் இருவரையும் ஒன்று சேர்க்க எழில் மற்றும் கயல் அடுத்து எடுக்கப் போகும் முயற்சி என்ன என்பதை இனி வரும் வாரங்களில் பார்க்கலாம்.
TRP Rating – 10.00 TVR
Don't miss out on the Latest Updates! Join our official WhatsApp channel and follow us on, YouTube, Instagram, Facebook, and Twitter for Breaking News. Send your press releases to: [email protected]