இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் ஒரு இராணுவ வீரனாக நடிக்கும் படம் தான் ‘அமரன்‘. இந்த படத்தின் படப்பிடிப்பு எப்படி இருந்தது என்பதை ஒரு Glimpse விடியோவாக படக்குழு பதிவிட்டு உள்ளனர்.
A redux of contemporary history from October 31
— Raaj Kamal Films International (@RKFI) August 14, 2024
#Amaranhttps://t.co/WlpgIWG0aw #AmaranDiwali#AmaranOctober31#Ulaganayagan #KamalHaasan #Sivakarthikeyan #SaiPallavi #RajkumarPeriasamy@ikamalhaasan @Siva_Kartikeyan #Mahendran @Rajkumar_KP @gvprakash @anbariv… pic.twitter.com/NinLr9iP5J
‘அமரன்’ படத்தின் பெரும்பாலான காட்சிகள் ஜம்மூ காஷ்மீரில் படப்பிடிப்பு நடத்தப்பட்டது. இன்று வெளியான இந்த மேக்கிங் வீடியோவில் காஷ்மீரின் அழகான இயற்கையும், இயல்பான மக்களின் வாழ்க்கையும் காட்டியுள்ளார்கள். பின்னர் எதிர்பார்க்காத நேரத்தில் எப்போது வேண்டுமானாலும் குண்டு வெடிப்பதை காட்டி பின்னர் படப்பிடிபில் கதாநாயகன் சிவகார்த்திகேயன் துப்பாக்கி சுடும் காட்சியும் உள்ளது.
அக்டோபரில் மோதப்போகும் தமிழ் சினிமாவின் நான்கு பெரிய படங்கள்!
இந்த படப்பிடிப்பின் பின்னணி காட்சிகளால் ‘அமரன்’ படத்துக்காக படக்குழு எப்படியான முயற்சிகள் எடுத்துள்ளனர் என்பது தெரிகிறது. நடிகர் சிவகார்த்திகேயனும் உடல் ரீதியாக கடினமாக உழைத்துள்ளார் என்பது படத்தின் போஸ்டர்களில் பார்க்கலாம். “இராணுவத்தில் பணிபுரியும் அனைவருக்கும் நன்றி” என கூறி இந்த விடியோவை பதிவிட்டுளார்கள்.
இந்த மேக்கிங் வீடியோவில் ரசிகர்களுக்கு மற்றொரு ஆச்சரியம், நடிகர் கமல் ஹாசன் குரலில் ஒரு பாடல் உருவாகியுள்ளது தான். இசையமைப்பாளர் G V பிரகாஷ் இசையில் உலக நாயகன் கமல் ஹாசன் இனிமையான உருக்கமான தேச பற்றுள்ள பாடலை பாடியுள்ளார். ‘போர் சொல்லும் வீரன்’ என்ற பாடலை கமல் ஹாசன் பாடியுள்ளார்.
உணர்ச்சிவசமான வரிகளில் கமல் ஹாசனின் குரல் நேர்த்தியாக ஒலிக்கிறது. இந்த படத்தின் கதை நிஜத்தில் நடந்த கதையின் தழுவல். மேஜர் முகுந்த் வரதராஜன் அவர்களின் வீரமான வாழ்க்கை கதையை தான் ‘அமரன்’ படம் பேசுகிறது. இந்த படம் தீபாவளி பண்டிகையை நோக்கி, அக்டோபர் 31 வெளியாகிறது.