Home Uncategorized சிவகார்த்திகேயன் 25 படத்தை இயக்குகிறாரா வெங்கட் பிரபு?

சிவகார்த்திகேயன் 25 படத்தை இயக்குகிறாரா வெங்கட் பிரபு?

தன்னுடைய 25வது படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு கையில் ஒப்படைக்க உள்ளார் நடிகர் சிவகார்த்திகேயன். 

by Vinodhini Kumar

சின்னத்திரையில் தன்னுடைய நகைச்சுவை திறமையால் பார்வையாளர்களை தன பக்கம் இழுத்து, வெள்ளித்திரையில் தற்போது டாப் ஹீரோக்களில் ஒருவராக கொண்டாடப்படுபவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவர் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து தற்போது தன்னுடைய 25வது படம் வரை வளர்த்துள்ளார். 

சிவகார்த்திகேயன்

நடிகராக மட்டுமல்லாமல் தயாரிப்பாளர், பின்னணி பாடகர் என பன்முக தன்மைகொண்டு குறிப்பாக சிறுவர்களுக்கு பிடித்தமான படங்களை கொடுப்பவர் Siva Karthikeyan. 2024ல் ‘அயலான்’, ‘அமரன்‘ படங்களில் நடித்துள்ளார். இதை தவிர தயாரிப்பாளராக ‘கொட்டுக்காளி’ படத்தையும் வெளியிட காத்திருக்கிறார். 

சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘அமரன்’ படத்தில் கமல் ஹாசன் பாடியுள்ளார்!

சிவகார்த்திகேயனின் பெரும்பாலான படங்கள் குடும்ப படங்களாக இருப்பதால், அவரின் 25வது படமும் எப்படிப்பட்ட கதை என்று ஆவல் கிளம்பியுள்ளது. இதையடுத்து இயக்குனர் வெங்கட் பிரபு சமீபத்தில் ஒரு நேர்காணலில் இதை பற்றி தெரிவித்துள்ளார். இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது.

GOAT movie poster

நடிகர் சிவகார்த்திகேயன் அவரிடம் ஒரு படத்தின் கதையை கேட்டிருப்பதாகவும், அவரின் 25வது படத்தை வெங்கட் பிரபு இயக்க சொல்லி கேட்டதாகவும் தெரிவித்திருந்தார். நகைச்சுவையான படங்களை இயக்குவதில் கைதேர்ந்தவர் வெங்கட் பிரபு. சிவகார்த்திகேயனும் காமெடி கதையில் நடித்து பிரபலமானவர் என்பதால் ஒரு முழு நீள காமெடி படமாக உருவானால் ஆச்சரியமில்லை.  

100 கோடியில் மொத்த படமும் ஓவரா? ‘GOAT’ படத்தின் பட்ஜெட் என்ன?

வெங்கட் பிரபு அவர்கள் GOAT படத்தில் பிசியாக இயக்கி வருவதாலும், நடிகர் சிவகார்த்திகேயன் அமரன் படத்தின் ரிலீசுக்கு காத்திருக்கிறார். இருவரும் அவர்களின் பெரிய படங்கள் வெளியான பிறகு அதிகார போர்ர்வமாக அறிவிப்பார்கள்.

You may also like

Follow Us

Subscribe

Get the latest Tamil cinema news in Tamil on Kollywood Glam. From celebrity news to actor and actress photos, videos, updates, தமிழ் சினிமா செய்திகள் and more.

 

©2024 Kollywood Glam, Media News Company.

All Right Reserved.